அட்டைப் பூச்சி
அட்டைப் பூச்சி
ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது.
இதன் தீனிப்பையில் ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது.
ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர் வாழ்ந்திருக்கும்.
இவை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது இரத்தம் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது.
தனது உடலில் இடம் உள்ள அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிய பிறகு அட்டைகள் தானாக விழுந்துவிடும். ஆனால், அது உறிஞ்சிய இடத்தில் ரத்தம் வடிவது நிற்க 5, 10 நிமிடங்கள் ஆகும்.
