பட்டுப்பூச்சி

பட்டுப்பூச்சி

bookmark

பட்டுப்பூச்சி

இதன் வழ்க்கை சுழற்சியானது 6-8 வாரங்களில் முடிவடைந்துவிடும். இப்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பார்கள்.

இது வெளிறிய நிறத்தில், சுமார் 2.5. செ.மீ நீளத்திலும் ,மிகவும் சோர்வாகவும் காணப்படும். அவற்றின் உடல்பாகம் நல்ல தடிமனாகவும், இறக்கைகள் பலவீனமாகவும் இருப்பதால் இவற்றால் பறக்கமுடிவதில்லை.

ஒரு பெண் பட்டுப்பூச்சி 300-400 வரை பழுப்பு கலந்த வெண்மை நிற, கோள வடிவிலான முட்டைகளை குவியலாக இடும். அதன் பிறகு இப்பூச்சிகள் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்.

முட்டைகளில் இருந்து 8-12 நாட்களில் சுமார் 3 மி.மீ. நீளமுள்ள, கருமை நிறம் கொண்ட இளம் புழுக்கள் வெளிவரும். அவை வளர்ச்சியடையும் போது 4 முறை தோல் உரிக்கும்.முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் சுமார் 5 செ.மீ. நீளத்திலும், உருளை வடிவத்திலும், மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும் காணப்படும். 

புழுப்பருவம் 30-40 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த புழு தொடர்ச்சியான ஒரே பட்டு நூல் இழையினால் நீள்வட்ட வடிவில் கூடு கட்டி அதனுள் கூட்டுப்புழுவாக மாறும்.

கூடு கட்டி முடிக்க 1 அல்லது 2 நாட்கள் ஆகும். கூட்டுப்புழுவில் இருந்து 10-12 நாட்களில் பட்டுப்பூச்சி வெளிவரும்.