நிகும்பலை யாகப் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நிகும்பலை யாகப் படலம்
கம்பராமாயணம் - இந்திரசித்து வதைப் படலம்
வந்தான் நெடுந் தகை மாருதி, மயங்கா முகம் மலர்ந்தான்,
எந்தாய்! கடிது ஏறாய், எனது இரு தோள்மிசை என்றான்;
அந்தாக என்று உவந்து, ஐயனும் அமைவு ஆயினன்; இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன் நெடுஞ் சாரிகை திரிந்தான்.
இந்திரசித்து - இலக்குவன் பெரும் போர்
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்; நெடு மாருதி, நிமிரும்
பேர் ஆயிரம் உடையான் என, திசை எங்கணும் பெயர்ந்தான்.
தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன, திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடு வினை ஒப்பன, மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வாளிகள் துரந்தான் - துயில் துறந்தான்.
அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான், இகல் அரக்கன்;
எவ் அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் -
எவ் அம்பரம், எவ் எண் திசை, எவ் வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான.
ஆயோன், நெடுங் குருவிக் குலம் என்னும் சில அம்பால்
போய் ஓடிடத் துரந்தான்; அவை, பொறியோ என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக் கணத்து, ஆயிரம் நெடுஞ் சாரிகை திரிந்தான்.
கல்லும், நெடு மலையும், பல மரமும், கடை காணும்
புல்லும், சிறு கொடியும், இடை தெரியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும், சென்றன - தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும், சின வய மாருதி தாளும்.
இரு வீரரும், இவன் இன்னவன், இவன் இன்னவன் என்னச்
செரு வீரரும் அறியாவகை திரிந்தார், கணை சொரிந்தார்;
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலெனப் பொருதார்.
விண் செல்கில, செல்கின்றன, விசிகம் என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில; கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங் காலவன் இடை செல்கிலன்; உடல்மேல்
புண் செல்வன அல்லால், ஒரு பொருள் செல்வன தெரியா.
எரிந்து ஏறின, திசை யாவையும்; இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடு நாண் ஒலி; படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின, சுடு வெங் கணை; தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ.
வெடிக்கின்றன திசை யாவையும், விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி; இரு வாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெங் கணை; கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெங் கனல்; இவை கண்டனர், புலவோர்.
கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் பற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர் கணையின்,
திடர் பட்டது, பரவைக் குழி; திரிவுற்றது புவனம்.
எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால்.
புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே.
நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம்.
எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால்.
புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே.
நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம்.
ஏமத் தடங் கவசத்து இகல் அகலத்தன; இருவோர்
வாமப் பெருந் தோள் மேலன; வதனத்தன; வயிரத்
தாமத்தன; மார்பத்தன; சரணத்தன,-தம் தம்
காமக் குல மட மங்கையர் கடைக்கண் எனக் கணைகள்.
எந் நாளினின், எத் தேவர்கள், எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்? என, இமையோர் எடுத்து அழைத்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும், ஒருகால் பொறை உயிரா,
முன் நாளினில் இரண்டாம் பிறை முளைத்தாலென வளைத்தார்.
வேகின்றன உலகு, இங்கு இவர் விடுகின்றன விசிகம்;
போகின்றன சுடர் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார்;
ஆகின்றது ஒர் அழிகாலம் இது ஆம், அன்று என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள், செவி நாண் ஒலி நுழைய.
மீன் உக்கது, நெடு வானகம்; வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண் மதி; மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை; தலை உக்கது, தகை சால்
ஊன் உக்கன, உயிர் உக்கன, உலகத்தினுள் எவையும்.
அக் காலையின், அயில் வெங் கணை ஐ-ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன், இளங்கோ உடல் செறிந்தான்;
கைக் கார்முகம் வளையச் சில கனல் வெங் கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட, இளங் கோளரி பொழிந்தான்.
தெரிந்தான் சில சுடர் வெங் கணை, தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின, இமையோரையும் முன் நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின, அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற.
குருதிப் புனல் சொரிய, குணம் குணிப்பு இல்லவன், குணபால்
பருதிப்படி பொலிவுற்றதை இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை, அவன் தேரினை உதிர்த்தான்;
பொருது இக் கணம் வென்றான் என, சர மாரிகள் பொழிந்தான்.
அத் தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத் தேவரும் உவந்தார்; அவன் உரும் ஏறு என முனிந்தார்;
தத்தா, ஒரு தடந் தேரினைத் தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன், அவை பாய்தலின், இளங் கோளரி பதைத்தான்.
பதைத்தான், உடல் நிலைத்தான், சில பகு வாய் அயில் பகழி
விதைத்தான், அவன் விலக்காதமுன், விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர் வரு காலனை, ஒரு கால் உற மருமத்து
உதைத்தாலென, தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான்.
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக் கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்; அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன் மணித் தோளையும் துளைத்தான்.
உள் ஆடிய உதிரப் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வட மேருவின் சலித்தான்; உடல் தரித்தான்,
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை துறைபோய்
விள்ளா நெடுங் கவசத்திடை நுழையாது உக, வெகுண்டான்.
மறித்து ஆயிரம் வடி வெங் கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித் தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொற் கணை, சிலை நாண் அறத் தெறித்தான்.
வில் இங்கு இது, நெடு மால், சிவன், எனும் மேலவர் தனுவே-
கொல்? என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கொடுங் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான்.
இந்திரசித்து மெலிவுற்றமை அறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தெரிவித்தல்
அத் தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, ஒரு மொழி கேள் என மொழிவான்,
எத் தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய்;
பித்தன் மனம் தளர்ந்தான்; இனிப் பிழையான் எனப் பகர்ந்தான்.
இந்திரசித்து விடுத்த பல் வேறு படைகளை ஏற்ற கணைகளால் இலக்குவன் மாற்றுதல்
கூற்றின்படி கொதிக்கின்ற அக் கொலை வாள் எயிற்று அரக்கன்
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற, இது தீர் எனத் தெரியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு காத்தான்.
அனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு பொறுத்தான்;
கன வெங் கதிரவன் வெம் படை துரந்தான், மனம் கரியான்;
சின வெந் திறல் இளங் கோளரி அதுவே கொடு தீர்த்தான்.
இந்திரசித்து விடுத்த அயன் படையை இலக்குவன் அழித்தல்
இது காத்திகொல்? என்னா, எடுத்து, இசிகப் படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என நினைந்தான், திசைமுகத்தோன்
முது மாப் படை துரந்தான், இனி முடிந்தாய் என மொழிந்தான்.
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும், மலரோன் -
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிற பிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
ஊனம் இனி இலது ஆகுக, இளங்கோக்கு! என உரைத்தார்.
ஊழிக்கடை இறும் அத்தலை, உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங் கனல்தன்னொடு சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனை படர்கின்றது பார்த்தான்,-
ஆழித் தனி முதல் நாயகற்கு இளையான் - அது மதித்தான்.
"மாட்டான் இவன், மலரோன் படை முதற் போது தன்வலத்தால்,
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்; முடிந்தான்" என, விட்டான்;
காட்டாது இனிக் கரந்தால், அது கருமம் அலது என்னா,
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் எனச் சமைந்தான்.
நன்று ஆகுக, உலகுக்கு! என, முதலோன் மொழி நவின்றான்;
பின்றாதவன் உயிர்மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான்;
ஒன்றாக இம் முதலோன் படைதனை மாய்க்க என்று உரைத்தான்,
நின்றான், அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைந்தார்.
தான் விட்டது மலரோன் படைஎனின், மற்று இடைதருமே?
வான் விட்டதும், மண் விட்டதும், மறவோன் உடல் அறுமே?
"தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய்" எனத் தெரிந்தான்;
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என, வானவர் உவந்தார்.
உரும் ஏறு வந்து எதிர்த்தால், அதன் எதிரே, நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தாலென, மலரோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது, விசும்பு எங்கணும் ஆகி.
படை அங்கு அது படராவகை, பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி செந் தீ உக எய்தான்,
தொடை ஒன்றினை; கணை மீமிசைத் துறுவாய், இனி என்றான்;
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்ததுபோல் தீர்ந்தது, வேகம்.
தேவர்களின் மகிழ்ச்சியும், சிவபெருமான் தேவர்களுக்கு உண்மையை விளக்கியதும்
விண்ணோர் அது கண்டார், வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ? என மனம் தேறினர், உவந்தார்;
கண் ஆர் நுதல் பெருமான், இவர்க்கு அரிதோ? எனக் கடை பார்த்து,
எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள் கேளீர்! என இசைந்தான்;
நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்;
"அறத்தாறு அழிவு உளது ஆம்" என, அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப் புகுந்து, அன்னது புரப்பார்,
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அது தெரிந்து, யாவரும் தெரியாவகை திரிவார்;
"உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து ஒருவன்" என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன்; அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால்.
நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு, இவர் நீர் குறை நேர,
விடும் பாக்கியம் உடையார்களைக் குலத்தோடு அற வீட்டி,
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என, இது எலாம்,
அடும்பு ஆக்கியத் தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான்.
உண்மை உணர்த்திய சிவபெருமானைத் தேவர்கள் புகழ்ந்து தொழுதல்
அறிந்தே இருந்து, அறியேம், அவன் நெடு மாயையின் அயர்ப்போம்;
பிறிந்தோம் இனி முழுது ஐயமும்; பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தோம் பகை முழுதும்; இனித் தீர்ந்தோம் இடர், கடந்தோம்;
செறிந்தோர் வினைப் பகைவா! எனத் தொழுதார், நெடுந் தேவர்.
மாயோன் படையை இந்திரசித்து ஏவுதலும், இலக்குவன் தன்னை அரியாகத் தியானிக்க, அது விலகிப் போதலும்
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்,
நீயே இது தடுப்பாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயே விசும்பு அடைவாய்; இது பிழையாது எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும் தடுமாறிட, துரந்தான்.
சேமித்தனர் இமையோர் தமை, சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும் அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்;
நேமித் தனி அரி, தான் என நினைந்தான், எதிர் நடந்தான்.
தீக்கின்றது இவ் உலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்று, அது விலங்கா, வலம்கொடு மேல்
போய்த்து; அங்கு அது கனல் மாண்டது, புகை வீய்ந்தது, பொதுவே.
ஏத்து ஆடினர், இமையோர்களும்; கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடினர்; அர மங்கையர் குனித்து ஆடினர்; தவத்தோர்,
காத்தாய் உலகு அனைத்தும் எனக் களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும், அம் மழுவாளியும், முழு வாய்கொடு புகழ்ந்தார்.
சிவன் படையை இந்திரசித்து விடுத்தல்
அவன் அன்னது கண்டான்; இவன் ஆரோ? என அயிர்த்தான்;
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா,
எவன் என்னினும் நன்று ஆகுக! இனி எண்ணலன் என்னா,
சிவன் நன் படை தொடுத்து, ஆர் உயிர் முடிப்பேன் எனத் தெரிந்தான்;
பார்ப்பான் தரும் உலகு யாவையும், ஒரு கால், ஒரு பகலே,
தீர்ப்பான் படை தொடுப்பேன் எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெருவுற்றது; இப்பொழுதே
மாய்ப்பான் என, உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா.
தானே சிவன் தரப் பெற்றது, தவம் நாள் பல உழந்தே;
தானே, "பிறர் அறியாதது தந்தேன்" எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா,
ஏல் நாளும் இது ஆனால், எதிர் தடை இல்லதை எடுத்தான்.
மனத்தால், மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ் சிலை நாண் தடந் தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான்.
சிவன் படையால் நேர்ந்த விளைவுகள்
சூலங்கள், மழுவும், சுடு சுணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக் குலம் எவையும்,
காலன் தனது உருவங்களும், கரும் பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும், நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய்.
ஊழிக் கனல் ஒரு பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங் காற்று அதன் உடனே வர, தூர்க்கும் -
ஏழிற்கும் அப் புறத்தாய் உள பெரும் போர்க் கடல் இழிந்தாங்கு
ஆழித்தலைக் கிடந்தாலென நெடுந் தூங்கு இருள் அடைய.
இரிந்தார் குல நெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார், இது பழுது ஆகிலது; இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது; பகரும் துணை நெடிதே?
திரிந்தார், இரு சுடரோடு உலகு ஒரு மூன்று உடன் திரிய.
வீடணன், இதனை விலக்க இயலுமோ? என, இலக்குவன் சிரித்தல்
பார்த்தான் நெடுந் தகை வீடணன், உயிர் காலுற, பயத்தால்
வேர்த்தான், இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!
தீர்த்தா! என அழைத்தான்; அதற்கு இளங் கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடர் கவி வீரரும், அவன் தாள் நிழல் புகுந்தார்.
இலக்குவனும் சிவன் படையை விட, அது இந்திரசித்து விடுத்த படையை விழுங்குதல்
அவயம்! உனக்கு அவயம்! எனும் அனைவோரையும், அஞ்சல்!
அவயம் உமக்கு அளித்தோம் என, தன் கைத் தலத்து அமைத்தான்;
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன், ஐம் முகம், உடையான், படை தொடுப்பேன் எனத் தெளிந்தான்.
அப் பொன் படை மனத்தால் நினைந்து, அர்ச்சித்து, அதை அழிப்பாய்;
இப் பொன் படைதனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா,
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா,
எப் பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின்.
விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது; மேலோர் மணி முரசின்
கண் ஆர்த்தது; கடல் ஆர்த்தது; மழை ஆர்த்தது; கலையோர்
எண் ஆர்த்தது; மறை ஆர்த்தது; விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள்; அறம் ஆர்த்தது; புறம் ஆர்த்தது, பெரிதால்.
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை,
மறுகாவகை வலித்தான், அது வாங்கும்படி வல்லான்;
தெறு காலனின் கொடியோனும், மற்று அது கண்டு, அகம் திகைத்தான்;
அறு கால் வயக் கவி வீரரும் அரி என்பதை அறிந்தார்.
தெய்வப் படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது பிழையாது என இசையா,
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன்; அவையும்
மொய் வித்தகன் தடந் தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க,
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலை மாரியின் நிருதக் கடல் கடப்பார்,
உய்யார் என, வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்;
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறு தாதையைச் செறுத்தான்.
வீடணனை இந்திரசித்து சினத்தால் இகழ்ந்து பேசுதல்
முரண் தடந் தண்டும் ஏந்தி, மனிதரை முறையைக் குன்றிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது, பின் சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாயைப்
புரட்டுவென் தலையை, இன்று; பழியொடும் ஒழிவென் போலாம்.
விழி பட, முதல்வர் எல்லாம் வெதும்பினர், ஒதுங்கி வீழ்ந்து
வழி பட, உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்,
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் வெஃகாப்
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார்?
நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை, உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா!
முந்தை நாள், உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளி,
கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒரு கைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப் பெரும் பலம் கொண்டேயோ?
பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பனக் குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆனாய்; உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே.
சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிந்தோராலே,
எல் வித்தும் படைக் கை உங்கள் தமையனை எங்களோடும்
கொல்வித்தும், தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ?
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப் புரண்ட நாள், புரண்டு மேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை?-விசயத் தோளாய்!
ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து எய்தும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான் -
தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியே? சரத்தினோடும்
வானிடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கில்! என்றான்.
வீடணன் மறுமொழி
அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய!
இவ் உரை கேட்டி! என்னா, இனையன் விளம்பலுற்றான்;
அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை, பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்;
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன், பிழைத்த போதே
"உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே?
"மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது" என்று உரைப்ப, நுன் தாதை சீறி,
"போ!" என உரைக்க, போந்தேன்; நரகதில் பொருந்துவேனோ?
வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண; நரகமும் எமக்கே ஆக.
"அறத்தினைப் பாவம் வெல்லாது" என்னும் அது அறிந்து, "ஞானத்
திறத்தினும் உறும்" என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக; பழியோடும் புணர்க; போகச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க என்றனன், சீற்றம் இல்லான்.
வீடணன் மேல் இந்திரசித்து விடுத்த கணை, வேல், முதலியவற்றை இலக்குவன் தடுத்தல்
பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறை முகப் பகழி பெற்றால்,
இறும் சிறப்பு அல்லால், அப் பால் எங்கு இனிப் போவது? என்னா,
தெறுஞ் சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து, செம் பொன்
உறும் சுடர்க் கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன்.
அக் கணை அசனி என்ன, அனல் என்ன, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
இக் கணத்து இற்றான், இற்றான் என்கின்ற இமையோர் காண,
கைக் கணை ஒன்றால், வள்ளல், அக் கணை கண்டம் கண்டான்.
கோல் ஒன்று துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன,
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரி விலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான்.
வீடணன் வெகுண்டு, இந்திரசித்தினது தேரின் பாகனையும் குதிரைகளையும் அழித்தல்
வேல்கொடு நம்மேல் எய்தான் என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக் கை தொடர் கனகத் தண்டால்,
கோல் கொளும் ஒருவனோடும், கொடித் தடந் தேரில் பூண்ட
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான், படியின் மேலே.
இந்திரசித்து ஆயிர கோடி அம்பு விடுத்து, ஆரவாரித்தல்
அழிந்த தேர்மீது நின்றான், ஆயிர கோடி அம்பு
பொழிந்தது, அவன் தோளின்மேலும், இலக்குவன் புயத்தின் மேலும்
ஒழிந்தவர் உரத்தின்மேலும், உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட, நோக்கி, அண்டமும் இரிய ஆர்த்தான்.
இந்திரசித்து அழிவு இல்லாத் தேர் பெற எண்ணி, இராவணனிடத்திற்குப் போதல்
ஆர்த்தவன், அனைய போழ்தின், அழிவு இலாத் தேர் கொண்டு அன்றிப்
போர்த் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையாமுன்னம், விசும்பிடைப் படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு சென்றான்.
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை - இலக்குவன் (வில்)
தூறா நெடு வாளி துரந்திடவே.
சிர நிரை அறுத்து, அவர் உடலைச் சிந்தி, மற்று
உர நிரை அறுத்து, அவர் ஒளிரும் வெம் படைக்
கர நிரை அறுத்து, வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது, அங்கு இலக்குவன் சரம்.
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன்; ஓம ஆகுதித்
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன், என்! எனத் திகைத்து நோக்கினான்.
ஆங்கு அது கிடக்க, நான் மனிதர்க்கு ஆற்றலேன்,
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற,
ஈங்கு நின்று யாவரும் இயம்ப, என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும்; ஒல்குமால்.
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகிதன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ? - கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்!
சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும்; யான் செரு ஏற்று நின்று,
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி, இறத்தலும் இருகால் பெற்றீர்.
விடு வாளிகள் கடிது ஓடுவ; வீற்று ஆகுவ; வீயா
நெடு நாணிடை சிதையாதவர், நேர் ஏவிய விசிகம்,
தொடு கார் விசை நுழையா, எதிர் மீளாது, இடை சோரா,
எடு பாணமும் அழியா, முதுகு இடு தூணியை அறுத்தான்.
அரு ஆகியும், உரு ஆகியும், அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும், எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும், இருள் ஆகியும், ஒளி ஆகியும், பொலியும்
திருமார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார்?
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது; இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான்; தகை மலர்மேல்
போதன் தரு படை போக்கினன் போலாம் எனப் புகைந்தான்;
ஏது இங்கு இவன் வலி நன்று; மற்று இது காண்பென் என்று இசைப்பான்.
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது; பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட, வடவைப் பொறி கொழிக்கின்றது, எவ் உலகும்.