சடாயு உயிர் நீத்த படலம்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
ஜடாயு உயிர் நீத்த படலம்
சீதை கேட்ட மானைப் பிடிக்க இராமர் சென்றதும், அவர் திரும்பி மானுடன் வருவதைக் கற்பனையில் கண்டு மகிழ்ந்து கொண்டு இருந்தால் சீதை. அப்போது மாரீசன் பொய்க் குரலில் இராமர் போல "ஹா சீதே! லக்ஷ்மணா" என்று அலறிய அபயக் குரல் கேட்டுத், தன் மணாளர் தான் அப்படி அழைத்தார் என்று எண்ணினாள். அக்குரலை கேட்டதால், ஒரு பூங்கொடி பற்றிய கொம்பை இழந்து தரையில் விழுந்தது போலவும், நல்ல பாம்பு இடியோசை கேட்டு நிலை குலைந்தது போலவும் தவித்தாள் சீதை. "அய்யோ இந்த மானைப் பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டு, அறிவில்லாமல் எனது வாழ்வை நானே முடித்துக் கொண்டேனே" என்று தவித்தாள்.
பிறகு சீதை, மறுபக்கம் அக்குரலை கேட்டு எவ்வித திகைப்பும், வருத்தமும் அடையாத லக்ஷ்மணனைப் பார்த்து அதிக கோபத்துடன், "எனது ஆருயிர் மணாளர், எதிரியாக வந்த அரக்கன் செய்த மாயையால் அபயம் கேட்டு விழுந்தார். நீயும் அவரது அபயக் குரலைக் கேட்டாய், இருந்தும் இவ்வாறு பதற்றம் இன்றி இருக்கிறாயே! இது சரியா? அப்போது நீ எனது மணாளர் மீது வைத்து இருக்கும் அன்பு பொய்யோ?" என்று கேட்டாள்.
அது கேட்ட லக்ஷ்மணன் துடித்துப் போனான், பிறகு அண்ணி சீதையைப் பார்த்து, "அன்னையே! என்ன வார்த்தைகள் சொல்லிவிட்டீர்கள். என்னுடன் வளர்ந்த எனது அண்ணனின் போர் திறனை நான் நன்கு அறிவேன். அவர் அரக்கர்களை அபயக் குரல் எழுப்பச் செய்வாரே தவிர அவர் ஒருகாலும் எந்த நிலையிலும் அபயக் குரல் எழுப்ப மாட்டார். பஞ்ச பூதங்களையும் தனது கோபத்தால் நிலை குலையும் படிச் செய்பவர். ஆதலால், இதுவும் அரக்கர்களின் மாயை தான். இராம பிரானுடைய அம்புபட்டு இறக்கும் அரக்கன், சாகும் போது கூவிய வஞ்சக் குரலே இது என்பதை தயை கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்" என்றான்.
லக்ஷ்மணன் கூறியதைக் கேட்ட சீதை மேலும் கோபம் கொண்டாள், "போதும், உங்கள் கற்பனையை நிறுத்துங்கள். எனக்குத் தெரியாதா எனது கணவரின் குரல்?இது நிச்சயம் எனது கணவரின் குரல் தான். மேலும், ஒரு நாள் பழகியவர்கள் கூட தன்னுடன் பழகிய அந்த ஒரு நாள் நண்பருக்குத் துன்பம் ஏற்பட்டால், அதற்காகத் தனது உயிரையும் கொடுப்பார்கள். ஆனால், நீரோ அவரது உடன் பிறப்பாக இருந்தும் கவலை கொள்ளாமல் இருக்கின்றீரே! நீர் இப்போது போகின்றீரா? இல்லை நான் இங்கேயே தீ மூட்டி இறக்கவா?" என்றாள் சீதை.
லக்ஷ்மணன் மேலும் சீதையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால், சீதை அதை லட்சியம் செய்யாமல் தீ மூட்டினாள். அவள் அதில் இறங்கும் நேரம், லக்ஷ்மணன் தடுத்தான், "அன்னையே! நடப்பது நடக்கட்டும். இதற்கு மேல் நான் பேசப் போவதில்லை. இப்போதே, நான் போகிறேன். ஆனால் ஒன்று, ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை. சரி,விதியை வெல்ல யாரால் தான் முடியும்? நான் போகிறேன், ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் தனியாக இருக்கின்றீர்கள் கவனமாக இருங்கள்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் லக்ஷ்மணன்.
லக்ஷ்மணன் எப்போது கிளம்புவான் என்று காத்துக் கொண்டு இருந்தான், அங்கு முன்னமே வந்து ஒளிந்து இருந்த ராவணன். எல்லாம் அவனது திட்டப் படி தான் நடக்கிறது என்று பூரித்துப் போனான் அவன். லக்ஷ்மணன் கிளம்பிய உடன் "இப்போது சீதை தனியாகத் தான் இருக்கிறாள், இது தான் சமயம். ஆனால், நான் இந்தப் பத்துத் தலைகளுடன் அங்கு செல்வது சரியாக வராது. அதனால் இப்போது என்ன செய்ய?" என்று சிந்தித்தவன், உடனே ஒரு வயோதிக பிராமண சந்யாசியின் தோற்றத்தை எடுத்தான். பிறகு சீதையின் பர்ணசாலை முன் வந்து நின்று "இந்தப் பர்ணசாலையில் யார் இருக்கிறார்கள்?" என்று மெலிந்த குரலில் கேட்டான்.
அக்குரலை கேட்ட சீதை வெளியே வந்தாள். வற்றிய உடலும், முதிய தோற்றமும், நடுக்கம் கொள்ளும் தளர் நடையும் கொண்டு, தனது பர்ணசாலைக்கு முன் வந்து நின்ற அந்த வயோதிக பிராமணனைக் கண்டாள். அந்தக் கோலத்தில் முனிவர் போல காட்சி அளிக்கும் அவன் உண்மையில் இராவணன் என்பதை அறியாத சீதை, அவன் மீது இறக்கம் கொண்டாள். உடனே அந்த மாறு வேடத்தில் வந்திருக்கும் இராவணனைப் பார்த்து, "முனிவர் பெருமானே தாங்கள் யார்? இதற்கு முன்னர் நான் உங்களைப் பார்த்ததில்லையே" என்றாள்.
ஆனால், இராவணனோ சீதையைக் கண்ட மாத்திரத்திலேயே மயங்கிப் போனான் "சூர்ப்பணகை சரியாகத் தான் சொல்லி இருக்கிறாள். இந்தப் பேரழகியை எனக்கு அவள் காட்டிக் கொடுத்த காரணத்தாலேயே இவளை இன்று நான் அடையப் போகிறேன். சூர்ப்பணகா உனக்கு இலங்கையயே பரிசாகக் கொடுத்தாலும் ஈடாகாது. ஆனால், இந்தப் பேரழகியுடன் வாழ்வதற்கு நான் தவத்தால் பெற்ற மூன்றரைக் கோடி ஆயுளும் போதாதே. இவளைப் பார்க்க இந்திரனைப் போல ஆயிரம் கண்கள் எனக்கு இல்லாமல் போனதேன்? எனது 20 கண்களும் இமை இல்லாமல் இருந்திருந்தால், இவளையும் நான் இமை மூடாமல் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பேனே. இப்போது எனது இமைகளே எனக்குப் பாரமாகி விட்டதே" என்றெல்லாம் சிந்தித்த படி நின்று கொண்டு இருந்தான் இராவணன். அதனால் சீதையின் வார்த்தைகள் அவன் காதுகளில் விழவில்லை. சீதை மீண்டும், மீண்டும் அவனைப் பற்றி விசாரிக்க, இராவணன் பிறகு தான் சகஜ நிலைக்கு வந்தான்.
அது கேட்ட இராமபிரான் ஆறுதல் அடைந்தார், பின்னர் ஜடாயுவிடம், "தந்தையே! அந்தக் கொடிய இராவணன் சீதையை கடத்திக் கொண்டு எந்த இடம் நோக்கிப் போனான்? அதனைச் சொல்வீர்" என்று கேட்டார்.
ஆனால், அவ்விடத்தை இராமருக்கு சொல்வதற்குள் ஜடாயுவின் உயிர் வைகுண்டம் சேர்ந்தது. ஜடாயு இறந்ததை நினைத்து ஸ்ரீ ராமரும், இளைய பெருமாளும் கலங்கித் தவித்தனர். பிறகு வீர மரணம் அடைந்து ஜடாயுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இராமபிரானே தனது கைகளால் ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகள் அனைத்தையும் செய்து முடித்தார். தசரதருக்குக் கிடைக்காத பாக்கியம், ஜடாயுவுக்குக் கிடைத்தது. ஆம் இராமர் கைகளால் தகனம் செய்யப் பட்டார் ஜடாயு.