கும்பிடுபூச்சி
கும்பிடுபூச்சி
கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பர்.
இதன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை.
சில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு
இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும்
இவை பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் தாவரங்களில் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும்
