குக்கர் விசில்
டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்!
நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?
டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!"
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."
"நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு.. சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை..."
"அவர் ரத்தம் என்ன குரூப்?"
"ஊழல் குரூப்பாம்"
ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்.
"அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கலாம்.. அதுக்காக குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக் காட்டுறது கொஞ்சங்கூட நல்லாயில்ல!"
