கொட்டாவி
"எங்க வீடு கோயில் மாதிரி...."
"அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?"
நேர்முகத்தேர்வில்: உங்கள் பெயர் என்ன?
ஆசாமி: கமல்!
தேர்வாளர்: வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க?
ஆசாமி: கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!
தேர்வாளர்: !!!
"உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?"
"ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது."
அவன்: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!
இவன்: அது பரவாயில்லையே, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட உடை மாற்றுவான்.
அவன்: நெஜமாவா சொல்ற.. அவனுக்கு என்ன வயசு இருக்கும்?
இவன்: என்ன, பொறந்து 3 மாதம்தான் ஆகுது!
"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!"
"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்...!"
