எதிர்கொள் படலம்

எதிர்கொள் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

எதிர்கொள் படலம்

(தயரத வேந்தனைச் சனக மன்னன் எதிர்கொண்டு வரவேற்கும் பகுதி. தயரத வேந்தன் தன் படைக் கூட்டத்துடன் கங்கையைக் கடந்து மிதிலையை அடைகிறான். சனக மன்னன் அவனை எதிர்கொண்டு வரவேற்க வருகின்றான். இருபெருஞ் சேனைகளும் ஒன்றிக் கலக்கின்றன. ஞாயிறும் திங்களுமாகிய இருபெருஞ் சுடர்களும் ஒன்றுவது போலத் தயரதன் சனகன் இருவரும் ஒன்றித் தழுவி மகிழ்கின்றனர். இராம இலக்குவர் பரத சத்துருக்கன் தந்தையைத் தொழுதெழத், தயரதன் பேருவகை யெய்துகிறான். நால் வேதமே போல் நால்வரும் அங்கு விளங்கினர். மக்கட் செல்வத்தை வழிநடத்துக

எனும் தந்தை ஏவலை ஏற்றுப் படைகளை நடத்தி இராமன் மிதிலை நகர் வீதியினை அடைகிறான்.

மணமுறைகளில் பெண் இல்லத்தை நோக்கி வந்த மணமகன் தாய் தந்தையர். சுற்றத்தார் முதலியோரைப் பெண் வீட்டார் எதிர்கொண்டு அழைத்து உபசரித்தலும். பின் மணமகனை ஊர்வலமாக அழைத்து வருதலும். பின் மணமகளைக் கோலஞ் செய்து மண மண்டபத்துக்கு அழைத்து வருதலும். மணமக்கள் ஒருவரையொருவர் பார்த்த பிறகு.

திருமண நாள் நிச்சயித்தலும். பின்பு நிச்சயித்த நாளில் திருமணம் இனிதே நிகழ்ந்தேறலும் இன்றும் உள்ள மரபு. இம் மரபே. அன்றும் இருந்தது என்பது தான் எதிர்கொள் படலம்.)

கங்கைக் கரைக்கு வந்த தசரதரும், அவரது சேனைகளும், வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பு தீர கங்கையின் நீரைப் பருகி தாகம் தீர்ந்தார்கள். பின்பு, அங்கு இருந்து புறப்பட்ட அவர்கள் மிதிலையை நோக்கிப் பயணம் செய்தார்கள்.

தசரதரின் வருகையை தூதுவர்கள் மூலம் அறிந்து கொண்டார் ஜனக மகாராஜா. தசரதரின் வருகையின் பொருட்டு, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தசரதரை, தானே சேனைகளுடன் சென்று எதிர் கொள்வது தான் முறை, என்று கருதிய ஜனகர், அதன்படியே தனது பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

திருப்பாற்கடல் மற்ற கடல்களை எதிர் கொண்டு வரவேற்பது போல, ஜனகராஜரின் சேனை தசரதர் சேனைகளை எதிர் கொண்டு வரவேற்றது. அந்த சமயத்தில் இன்னிசை வாத்தியங்கள் முழங்கின. தசரதரைக் கண்ட ஜனகர் தேரில் இருந்து இறங்கி அவரை புன்னகையுடன் வணங்கி வரவேற்றார். பின்னர் தசரதரும் பதிலுக்கு ஜனகரை வணங்கி தனது ரதத்தில் ஏறி வரும்படி அழைத்தார். ஜனகரும் அவ்வாரே தசரதர் வந்த அதே தேரில் ஏறிக் கொள்ள, அச்சமயத்தில் தசரதர் ஜனகரை தழுவிக் கொண்டார். பின்னர், இருவரும் மிதிலையை அடையும் வரையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.

பட்டணப் பிரவேசம் செய்யும் அந்த இரு மன்னர்களையும் வழி எங்கும் உள்ள மக்கள் திரள் திரளாக உவகையுடம் வரவேற்றார்கள். இராமபிரானும் தனது தம்பியுடம் அழகிய பொற் தேரில் ஏறி தனது தந்தையான அயோத்தி அரசர் தசரதரை கண்டு ஆசி பெற விரைந்து வந்து சேர்ந்தார். ராமனின் வணக்கத்தை ஏற்ற தசரதர், வெகு காலம் கழித்துத் தனது உயிர் மீண்டும் தன்னிடம் வந்தது போலக் கருதினார். ராமனை அவர் மகிழ்ந்து தழுவிக் கொண்டார். பாசத்தின் பிடியில் அவர்கள் தங்களையும் மறந்து வெகு நேரம் கட்டுண்டு நின்றார்கள். பின்பு லக்ஷ்மணனும், தனது தந்தையான தசரதரை வணங்க, லக்ஷ்மணனையும் அன்புடன் ஆசிர்வதித்து தழுவிக் கொண்டார் தசரதர். இராமபிரான் பின்னர் தனது தாயார்கள் மூவரையும் வணங்கி ஆசிர் வாதம் பெற்றார்.

இராமனை என்றும் மறவாதவன் பரதன், வெகு நாட்கள் கழித்து தனது அண்ணனைப் பார்த்த பரதனால் பேச முடியவில்லை. கண்களில் தாரை, தாரையாக கண்ணீர் பெருக ராமனை வணங்கினான், பரதனை வாழ்த்திய இராமர், அவனை அன்புடன் தழுவிக் கொண்டார். பின்னர் சகோதரர்கள் நால்வரும் மீண்டும் ஒன்று இணைந்தனர்.

இராமன் தந்தைக்கு ஏற்ற தமையன். அதுபோல தசரதரும் தமயனுக்கு ஏற்ற தந்தையாக அங்கு காணப்பட்டார். பின்னர், இராமனை தனது அருகில் அழைத்த தசரதர்," அருமை மகனே! நம் சேனையை அழைத்துக் கொண்டு நீ முன்னே செல்!" என்று உத்தரவு பிறப்பித்தார். இராமனும்,தம்பிகள் தன்னை பின் தொடர தந்தையின் ஆணைப்படி சேனைகளை முன் நின்று அழைத்துச் சென்றார். எல்லோரும் இராமனை மீண்டும் வாழ்த்த, மிதிலையின் கன்னிப் பெண்கள், கண் இமைக்காமல் இராமனின் அழகில் மயங்கி நின்றார்கள். இராமர் நகர வீதிகளிலே பவனி வந்த போது அந்த அழகைக் கண்ட மிதிலையின் பெண்கள் அடைந்த நிலை வருமாறு