வெயிட் பிளீஸ்
ஒருத்தி: "என் வீட்டுக்காரரு ரேஷன் கடைக்கு சுகர் வாங்க போனாலே எல்லோரும் ஷாக்காயிடுவாங்க."
மற்றவள்: "உன் வீட்டுக்காரரு என்ன செக்கிங் இன்ஸ்பெக்டரா?"
ஒருத்தி: "அதெல்லாம் இல்ல. அவர் சுகர் பேஷண்டாச்சே...!"
"கண்டக்டரைக் கட்சியிலே சேர்த்தது தப்பாப் போச்சு."
"ஏன்?"
"சில்லறை விஷயங்களுக்கெல்லாம் தகறாரு பண்றாரு."
"வரிசையில் வந்த உங்களை நிறுத்தினவரிடம் 72 கிலோன்னு சொன்னீங்களே எதுக்கு?"
"அவர் என்னை நிறுத்துவதற்கு முன்னால வெயிட் பிளீஸ்..ன்னு சொன்னாரே!"
"கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?"
"அப்புறம்...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்."
"பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு பையன் கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...!"
"ஏன்...?"
"கல்யாணத்திற்குப் பிறகு தினம் பொண்ணைக் கடித்து வைக்கிறானாம்."
