பத்துப் பாத்திரம்
"நான் தற்கொலை பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்..."
"பேசாம நீங்க ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்திடுங்க...!"
"உங்க மனைவியோட பெயர் சத்தான லட்சுமியா?"
"முதலில் சந்தான லட்சுமியாத்தான் இருந்தாள். இப்போ அவ குண்டாயிட்டதால சத்தான லட்சுமின்னு மாத்திட்டேன்."
"பத்துப் பாத்திரம் தேய்க்க ஆள் போட்டீங்களே... என்ன ஆச்சு?"
"கூட ஒரு பாத்திரம் தேய்க்கச் சொன்னேன் முடியாதுன்னு போயிட்டா...!"
"நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?"
"இடைவேளை நல்லா இருந்தது...!"
"தூங்கும்போது கூட கையைக் கட்டிக்கிட்டுத் தூங்குறீங்களே...?"
"பக்கத்தில என் மனைவி படுத்திருக்கிற மாதிரியே பழகிப் போச்சு..."
