விளம்பர படம்
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."
"அதெப்படி?"
"மழையே பெய்யவில்லையே!"
நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?
நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே...
"என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது."
"அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?"
"இல்லை. அவங்களெல்லாம் மொட்டை."
ஆசிரியர் மாணவனிடம் : ஆஞ்சநேயருக்கு ரொம்பப் பிடிச்ச பழம் எதுன்னு சொல்லு.
மாணவன் : ராம் சீ(த்)தா பழம் சார்.
டீச்சர் : பூமி உருண்டை தான் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லு.
மாணவி: பூமி உருண்டைன்னு நான் சொல்லவே இல்லையே டீச்சர்.
