மேக்கப் மேன்
(இரண்டு வயதான பெண்மணிகள்)
"இவ்வளவு காலத்துக்குப் பிறகு வாழ்க்கையே கசந்து போச்சுன்னு அலுத்துக்கிறீயே! ஏன்?"
"எங்க வீட்ல எல்லோருக்கும் சுகர் வந்திருச்சி!"
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
"உங்க வீட்டுக்கு முன்னால 'ஹவுஸ் புல்'ன்னு போர்டு போட்டிருக்கீங்களே... எதுக்கு?"
"லீவுக்கு வீட்டுக்கு வந்த பிள்ளைங்களால வீடே நெறைஞ்சிருச்சுங்க..."
"பெண்ணைக் கூப்பிடுங்க... நேரமாச்சு."
"கொஞ்சம் பொறுங்க. மேக்கப் மேன் இப்பத்தான் வந்திருக்காரு!"
"மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
"என்ன வேலை?"
"ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"
