கோந்து கம்பெனி

bookmark

ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?

மற்றொருவர்: பின்ன...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.

ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...

மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!

"பெண்ணோட அப்பா ரொம்பப் பசையுள்ளவருன்னு எப்படிச் சொல்றே?"

"கோந்து கம்பெனி வச்சிருக்காரே!"

"மாட்டுக்கு லோன் போட்டேன்... ஏன் கொடுக்கல்லே?"

"மாட்டு லோனை மனுஷன்கிட்டே எப்படிக் கொடுக்க முடியும்?"

"கடவுள் ஏன் கல்லானார்?"

"உலோகத்தில இருந்தா கடத்திட்டுப் போயிடுறாங்களே!"