மூக்குக் குத்து விழா

bookmark

"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?"

"மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்."

மாமா: "போன மாதம்தானே உங்க பொண்ணுக்கு காதுகுத்து விழா நடத்தினீங்க அதுக்குள்ள அடுத்த அழைப்பிதழ் கொண்டு வந்துட்டீங்களே...?"

மச்சான்: "இது மூக்குக் குத்து விழா அழைப்பிதழ்!"

"நாட்டுக்காக பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்தறேன்னு சொல்றீங்களே... நீங்க வச்சிருக்கிறது டூ வீலரா, போர் வீலரா?"

"சைக்கிள்".

தோழி: "உன் மாமியார் புடவையையும் நீதான் துவைக்கிறியா? ஏன்?"

ஒருத்தி: "எனக்குத்தான் மாமனார் இல்லையே...!"

நீதிபதி: "மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?"

குற்றவாளி: "ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!"