எலிமென்டரி ஸ்கூல்

bookmark

"சரத்குமார் அ.தி.மு.க., கூட்டணிக்குப் போயிட்டாரே.. இனி என்னவாகும்...?"

"செல்லமே 'ஜெ'ல வரும்."

"இந்த ஸ்கூல்லே ஏன் பூனைகள் நடமாட்டம் அதிகமாயிருக்கு?"

"இது 'எலி'மென்டரி ஸ்கூலாச்சே."

"கலைக்காக என் கடைசி மூச்சுவரை உழைப்பேன்னு அவர் சொல்றாரே?"

"கலைங்கறது அவரோட சின்ன வீடு!"

"அந்த ஆளு எப்பவும் என்னைக் குறைச்சுத்தான் எடை போடறாரு...!"

"ரேசன் கடையில வேலை பார்க்கிறவர் அப்படித்தானிருப்பார்...!!"

"இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க...."

"அல்வா தருவாங்க."