மந்தரை சூழ்ச்சிப் படலம்

தயரதன் சோதிடரை நாள் கேட்டல்
கடி கமழ் தாரினான்,
கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
மொழிமின்’ என்றனன்.
கணித மாக்கள் - சோதிடர்; வடி மழுவாளவன் - பரசு ராமன்.