பெயில்

bookmark

"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க."

"எப்படி?"

"வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"

எம்.டி: எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு

ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்!

எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்

ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!

ஆசிரியர்: அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....

தலைமை ஆசிரியர்: என்னதான் செல்றான் பையன்?

ஆசிரியர்: கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் 

வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்?

தலைமை ஆசிரியர்:?!?!

"அவர் ஒரு போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற?"

"ஜலதோஷம்னு போனேன் உனக்கு எட்டாம் இடத்தில தோஷம்னு சொல்றார்."

"தலைவர் கோர்ட்ல இருந்து வந்ததும் வருத்தத்தோடு பாஸ்..பாஸ்னு சொல்றார்"

"பெயில் கிடைக்கலையாம்..பெயிலுக்கு எதிர்ப்பதம் பாஸ்னு நினைச்சு சொல்றார்"