திமிங்கலம்
திமிங்கலம்
உ லகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம்.
இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும் .
இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன.
ஒரு திமிங்கலத்தின் எடை, 3000 மனிதர்களின் எடைக்குச் (சராசரியாக 50 கிலோகிராம் எடையுள்ள மனிதனைப்போல்) சமமாக இருக்கும்.
இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் போல பீய்ச்சி அடிக்கின்றன.
ஒரு முறை சுவாசித்தால் 80 நிமிடங்கள் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும்.
1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.
இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன.
இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.
மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டி.
இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை.
இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.
ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.
ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும்.
ஒரு நீலத் திமிங்கலத்தின் நாக்கு ஏறத்தாழ 2.7 டன்கள் (2700 கிலோகிராம்) வரை இருக்கும். இது ஒரு வளர்ந்த பெண் யானையின் எடைக்குச் சமம்.
