சுறா

சுறா

bookmark

சுறா

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்

இவை மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து லட்சம் துளிகளில் ஒரு துளி ரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவிலிருந்து கூட முகர்ந்துவிட முடியும்.

இவற்றின் கேட்கும் திறனும் அதிகம். மிக நுண்ணிய ஒலிகளைக்கூட கேட்கும் திறன் பெற்றவை.

குறைந்தது நான்கு வரிசைப் பற்களை கொண்டுள்ளது. இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதில் ஒரு பல் உடைந்து விழுந்தால், பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும். அப்படி நகராவிட்டாலும் கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய பல் முளைத்து விடுகிறது.

இவற்றால் வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாது. பார்வையும் கூர்மை கிடையாது. மந்தமான வெளிச்சத்தில்தான் இதற்குப் பார்வை தெளிவாகத் தெரியும்.

மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும்.

மென்மையான திசுக்களை உடைய விரைவில் மக்கிப் போகும் தன்மையுடைய எலும்புகளை கொண்டுள்ளன.

ஈரல்களில் உள்ள லேசான எண்ணெய் அவை மிதப்பதற்கு உதவுகிறது. இந்த எண்ணெய் தண்ணீரைவிட லேசானது. 

தண்ணீரில் மிதக்கும்போது தனது உடலை நிலை நிறுத்திக் கொள்ள உடலின் முன்புறத்தில் உள்ள துடுப்புகளைப் பயன்படுத்தி விமானம் போல பேலன்ஸ் செய்து கொள்கிறது. கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் செல்பவையாக இருந்தாலும் நினைத்தவுடன் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிடும் சிறப்பும் வேறு எந்த மீனுக்கும் இல்லை. 

கடலின் ஆழத்தில் வசிப்பவை செதில்களாலும் மற்றவை அதனது தோலின் மூலமாகவும் சுவாசிக்கின்றன.