செக்கிங் இன்ஸ்பெக்டர்
"இரவும் பகலும் சேகரோட நாய் அவன் கூடவே தான் இருக்கு."
"அப்ப... 'நாயில்லாமல் அவன் இல்லே'ன்னு சொல்லு...!"
ஒருத்தி: உன்னோட புருஷன் இன்ஸ்பெக்டரா இருந்துக்கிட்டு எல்லார் கிட்டேயும் கையை நீட்டுகிறாராமே.
அடுத்தவள்: அவர் தான் செக்கிங் இன்ஸ்பெக்டராச்சே.
அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே.
இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.
ஒருவர் டாக்டரிடம்: டாக்டர், நான் பஸ்ஸிலே ஏறினவுடனேயே தூக்கம் தூக்கமா வருது டாக்டர்.
டாக்டர்: வந்தா என்ன? உட்கார்ந்துக்கிட்டு கண்ணை மூடி தூங்க வேண்டியது தானே.
அவர்: நான் தூங்கிட்டா பஸ்லை யாரு ஓட்டறது.
பாகவதர் தன் சிஷ்யனிடம்: பாட்டுப் பாடறதுக்கு முதலில் என்ன வேணும். சங்கீதமா, சாரீரமா? சொல்லு பார்க்கலாம்.
சிஷ்யன்: வாய் வேணும் சுவாமி.
