ஏட்டுத் தொகை

bookmark

"உன் மனைவி நீ கேட்கிற கேள்விக்கு உடனே 'பட்டு'ன்னு பதில் சொல்லிடுவாங்களா ஆச்சர்யமாயிருக்கே...!"

"ஆமாம். நான் உனக்கு என்ன புடவை பிடிக்கும்ன்னு தான் கேட்பேன்...!"

"நம்ம கபாலி ரிட்டயர் ஆனதும் தான் கொடுத்த மாமூலை மையமா வைச்சு ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டிருக்கான்..."

"என்ன தலைப்பு....?"

"ஏட்டுத் தொகை!"

"இந்த மாத்திரையை எத்தனை வேளை சாப்பிடணும்னு டாக்டர்கிட்ட கேட்கச் சொன்னேனே... கேட்டியா?"

"கேட்டேன்... இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டாரு!"

"மணப்பெண் சீர்களோட ஒரு தொட்டிலும் வந்திருக்கே... பின்னாடி அவளுக்குப் பிறக்கப் போற குழந்தைக்கா?"

"இல்லை, அவளே ஒரு குழந்தை மாதிரின்னு அவங்க அப்பா-அம்மா சொல்றாங்களாம்.!"

"எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ செல்லம்." 

"உன்னை நான் பத்திரமா 'வாசன் ஐ கேர்' கூட்டிட்டு போறேன்."