எக்ஸ்ரே
"என் மூளையை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததிலே ஒண்ணுமே இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டார்."
"இது ஏற்கெனவே தெரிந்ததுதானே! ஏன் வீணாச் செலவு செய்தே?"
"நம்ம தலைவரு ஒருமைப்பாட்டிலே ரொம்ப நம்பிக்கை உடையவருன்னு எப்படிச் சொல்றே?"
"அவரு இந்தியாவில சுரண்டாத மாநிலமே கிடையாதுல்ல."
காதலன்: பேரழகிகளை பிடிக்காது....
காதலி: என்னை உனக்கு பிடிக்காதா?
காதலன்: யார் சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்.
"ஏன்டி! டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
"பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?"
"தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!"
