எழுச்சிப் படலம்

எழுச்சிப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
 

எழுச்சிப் படலம்

(ஜனகன் அனுப்பிய தூதர்கள் தசரதனிடம் செய்தியைத் தெரிவிக்கின்றனர். சனகனது ஓலையின் செய்திகேட்டுத் தசரதன் உவகையடைந்து.அத்தூதருக்கு அணிகலன் முதலிய பரிசுகள் வழங்குகின்றான். வள்ளுவன் அரசன் ஆணைப்படி மணமுரசு அறைய. நால்வகைப் படைகளும் எழுகின்றன. படைகளின் பயணம் தொடங்குகின்றது. பப்பரர் பாரம் சுமந்து செல்லுகின்றார்.மகளிர் மனங்களித்து புரிக்கின்றனர். ஆடவர் மகிழ்ந்து செல்லுகின்றனர். யானையின் வருகையைக் கேட்டு மகளிர் நிலைகெட்டு ஓடுகின்றார்கள். பாணரும் விறலியரும் இசை எழுப்புகின்றார்கள். தசரதனின் நேய மாதரும் பட்டத்து அரசியாரும் போகின்றார்கள். அப்பொழுது மெய்க்காப்பாளர் காவல் புரிகின்றார்கள். வசிட்டர் சிவிகையில் செல்ல. அவருக்குப்பின்னே பரதனும் சத்துருக்கனனும் செல்லுகின்றார்கள். யாவரும் சந்திர சயிலச் சாரலில் தங்குகின்றார்கள்.)

திருமண ஓலையைத் தாங்கிக் கொண்டு ஜனக மகாராஜாவின் தூதுவர்கள் அயோத்தியின் அரண்மனையை அடைந்தனர். தசரதரின் உத்தரவுப் படி வாயில் காப்போர் அனுமதிக்க, ஜனகரின் தூதர்கள் சக்ரவர்த்தி தசரதரைக் கண்டு, ஜனக மகாராஜரின் செய்தி அடங்கிய ஓலையை அளித்தனர். மன்னர் அந்த ஓலையை வாங்கிப் படிக்குமாறு, ஓலை வாசிப்பவனிடம் கூற,அவன் அந்த ஓலையில் உள்ள செய்தியை வாசித்தான். அந்த ஓலையில் இராமபிரானின் வில் வித்தையைப் பற்றி புகழ்ந்து எழுதியதை கேள்விப்பட்ட தசரதர் அக மகிழ்ந்தார். பிறகு அந்த ஓலையின் மூலம், ராமன் சிவ தனுசை முறித்த விஷயத்தையும் அறிந்த அவர், "சிவ தனுசை இராமன் முறித்ததாலோ, அன்று ஒரு பெரும் சத்தம் இங்கே கேட்டது?" என்று வியப்புடன் கூறினார்.