ஊசிவால் குளவி

ஊசிவால் குளவி

bookmark

ஊசிவால் குளவி

இவை முதுகெலும்பு இல்லாத பூச்சி இனமாகும்.

இவை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மெல்லிய இறக்கைகளும் அதில் நரம்புகள் போன்ற கோடுகளும் உடையவை. 

இந்தக் குளவியின் தனிச்சிறப்பு, இதன் வயிற்றுப் பகுதியின் கடைசிக் கண்டத்தில் இருந்து நீண்ட ஊசி போன்ற முட்டையிடும் நீட்சி இருக்கும்.

ஊசிவால் குளவிகள் தங்கள் முட்டைகளைத் தரையில் இடுகின்றன. ஆனால், சில ஊசிவால் குளவிகள் மட்கிப்போன மரங்களின் மேற்பரப்பில் பறந்து மரத்தின் உள்ளே இருக்கும் பூச்சிகளின் உடலில் தமது நீண்ட ஊசிபோன்ற நீட்சியின் உதவியால் முட்டையிடும். குளவி ஒரு புழுவைப் பிடித்தவுடன் தனது கொடுக்கால் கொட்டி விடும். புழு சாவதற்கு பதிலாக மயக்க நிலைக்குச் சென்று விடும். மயக்க நிலையில் உயிரோடு இருக்கும் புழுவுக்குள் தன் முட்டைகளை இடும். 

புழுவுக்குள் இருக்கிற குளவியின் முட்டை வளர ஆரம்பிக்கும். குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் முட்டையிலிருந்து வெளிவருகிற குளவி புழுவின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்டு பிறகு வெளியேறும். இப்படித்தான் ஊசிவால் குளவிகள் தங்கள் இனத்தை உற்பத்தி செய்துகொள்கின்றன.