குழிநரி

குழிநரி

bookmark

குழிநரி

இவை தன் இரையைப் பிடிப்பதற்காக தோட்டங்கள், திறந்தவெளிப் பகுதிகளில், குறிப்பாக மணல் பகுதிகளில் கூம்புவடிவத்தில் சரிவான குழிகளை உருவாக்குகிறன. இந்தக் குழியின் எந்தப் பாகத்தில் ஒரு பூச்சி கால் வைத்தாலும், அவை குழியின் மையப் பகுதிக்குள் விழுந்து குழிநரிக்கு உணவாகிவிடும். 

குழிநரியின் குடம்பியானது போதுமான உணவு கிடைக்கவில்லை என்றால் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதங்களைக் கொண்டிருக்கும் இதனால் உணவு இல்லாமல் இவற்றால் நீண்ட காலம் வாழ முடியும்.

குளிர்காலத்தில் அவை ஆழமான இடத்திற்குச் சென்று அங்கு செயலற்ற நிலையில் இருக்கும்

குடம்பி அதன் அதிகபட்ச அளவு வளர்ச்சி நிலையை அடையும் போது, அது கூட்டுப்புழு நிலையை அடைந்து உருமாற்றம் அடைய தயாராகிறது

இவை மணல் அல்லது எதாவது ஒரு இடத்தில் பட்டுநூல் போன்ற இழையை வெளியுமிழ்ந்து தன்னைச்சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளுகின்றது. இந்தக் கூட்டோடு இவை மணலில் பல செண்டி மீட்டர் ஆழத்துக்கு புதைத்துக் கொள்ளலாம்.

சுமார் ஒரு மாத காலகட்டத்தில் வயதுவந்த பூச்சியாக உருமாற்றம் அடைந்து தன் கூட்டைப் பிளந்து மேற்பரப்புக்கு வருகிறது. 

மேலே வந்த சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, குழிநரிக்கு இறக்கைகள் முழுமையாக திறக்கப்படுகின்றது,