ஸ்பெக்ட்ரம்

bookmark

"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!"

"வரதட்சணை நிறைய கேட்டாரா?"

"இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!"

"இந்தப் பதிப்பகத்துல மட்டும் கூட்டம் அலைமோதுதே, என்ன விஷயம்?"

"வெங்காயம் இல்லாத சமையல்ங்கிற தலைப்புல நிறைய புத்தகங்கள் வெளியிட்டுருக்காங்களாம்!"

"போலீஸ் வந்துருக்கு. ஏன் அவரும் ஸ்பெக்ட்ரம்ல சம்பந்தப்பட்டிருக்காரா?"

"நீங்க வேற! அவரு வீட்டுல தினமும் வெங்காய சாம்பார் பண்ணுறாராம்."

"பி.ஜே.பி. பொதுக் கூட்டத்துக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கே...."

"போஸ்டர்ல 'வெங்காய நாயுடு பேசுகிறார்'னு போட்டுட்டாங்களாம்!"

"நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?"

"ராசாவா.... பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"