வைஜெயந்திமாலா

வைஜெயந்திமாலா

bookmark

வாழ்க்கை வரலாறு

வைஜெயந்திமாலா பாலி, இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.

வாழ்க்கை குறிப்பு:

வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் 13 ஆகஸ்ட் 1936 ல் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார்.

இவரது தந்தையார் பெயர் எம்.டி.ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார்.

வைஜெயந்திமாலா, வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மர்ம வீரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது அரங்கேற்றத்தினை தனது 13வது வயதிலேயே முடித்தார். வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அரசியல் வாழ்க்கை:

வைஜெயந்திமாலா, 1984இல் முதல் முறையாக மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.