வேள்விப் படலம் - 465
அரக்கர் படையினை
இராமபிரான் இலக்குவற்குக் காட்டுதல்
465.
கருவடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
‘பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்’ என. இலக்குவதற்கு இராமன் காட்டினான்.
கவர் உடை எயிற்றினர்- பிளவுப்பட்ட பற்களை உடையவர்களும்;
கடித்த வாயினர் - பற்களால் உதட்டைக் கடித்த வாயை
உடையவர்களும்; துவர் நிறப்பங்கியர் - பவளம் போன்ற நிறமுடைய
தலை மயிரை உடையவர்களும்; சுழல்கண் தீயினர் - சுழலுகின்ற
கண்களிலே தீயை உடையவர்களும் ஆகிய இவர்களே; பவர் சடை
அந்தணன் - செறிந்த சடை முடியை உடைய விசுவாமித்திரரின்;
பணித்த தீயவர் இவர் - சொன்ன கொடிய அரக்கர்களாகும்; என
இலக்குவனுக்கு இராமன் காட்டினான் - என்று இலக்குவனுக்கு
இராமன் சுட்டிக் காட்டினான்.
கவர்: பிளவு. எயிறு: பல். துவர்: பவளம். பங்கி: மயிர். பவர்:
செறிவு 46
