வேள்விப் படலம் - 462

bookmark

அரக்கர் சினந்து பொருதல் (462-463)

462.

எய்தனர்;எறிந்தனர்; எரியும். நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வளர பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர். ஒன்று அல தீய மாயமே.
 
எய்தனர்   -  (அவ்வரக்கர்)   அம்புகளை   வில்லில்   தொடுத்து
எய்தார்கள்;  எறிந்தனர்  -  சூலம்  வேல்  முதலியவைகளை  எடுத்து
மேலே எறிந்தார்கள்; எரியும் நீரும் ஆய் பெய்தனர் - நெருப்பையும்
தண்ணீரையும் பெய்தார்கள்;  பெருவதை  பிடுங்கி  வீனர்  - பெரிய
மலைகளைப்   பிடுங்கி   வீசினார்கள்;   வைதனர்   தெழித்தனர்  -
வைதார்கள்.  அதட்டினார்கள்;  மழுக்கொண்டு  ஓச்சினர்  - மழுவை
எடுத்துக்  கொண்டு  வீசினார்கள்;  ஒன்றல  தீய மாயம் செய்தனர் -
பலவிதமான மாயச் செயல்களைச் செய்தார்கள்.  

எய்தல்:   அம்யெய்தல். பெய்தல்: கொட்டுதல். எறிதல் : வேலெறிதல்.
வரை:  மலை.  வைதல்:  நிந்தித்தல்.   தெழித்தல்:   அதட்டுதல்.  மழு:
மழுப்படை.  ஒச்சல்:  வீசுதல். மாயம்:  மாயச்  செயல்கள். ஒன்று  அல:
ஒன்றல்லாத பல செயல்கள் என்ற பொருளை உணர்த்தும்.          43