வேள்விப் படலம் - 459

bookmark

வேள்வியை இராமலக்குமணர் காத்தல்

459.

எண்ணுதற்கு. ஆக்க. அரிது
   இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய
   முனிவன் வேள்வியை.
மண்ணினைக் காக்கின்ற
   மன்னன் மைந்தர்கள்.
கண்ணினைக் காக்கின்ற
   இமையின் காத்தனர்.
 
மண்ணினைக்  காக்கின்ற  மன்னன்   மைந்தர்கள்-  நல்லாட்சி
செய்து  காக்கும்  மன்னனான தயரதனுடைய   மைந்தர்களான   இராம.
இலக்குவர்கள்; முனிவன் விண்ணவர்க்கு  ஆக்கிய  வேள்வியை  -
விசுவாமித்திர  முனிவர்  தேவர்களின்  பொருட்டுச் செய்த வேள்வியை;
கண்ணினைக்  காக்கின்ற   இமையின்   -  கண்விழியைக்  காக்கும்
இமைபோல; இரண்டு  மூன்று நாள் காத்தனர் - ஆறு நாட்கள் வரை
காப்பாற்றினர்;  எண்ணுதற்கு ஆக்க அரிது - (இச்செயல்)  நினைத்துப்
பார்ப்பதற்கும் செய்தவற்கும் அரியதேயாம்.   

வேள்வி   எண்ணுதற்கு  ஆக்கரிது  என்றும்  பொருள் கொள்வர்.
விண்ணவர்:  தேவர். அவர் பொருட்டுச் செய்ததாதலின் ‘’விண்ணவர்க்
காக்கிய  வேள்வி’’  என்றார்.  மைந்தர்:  புத்திரர். மண்: பூமி. இராம.
இலக்குவர்களின்  காவலின்  வேள்வி ஆறு நாட்கள் நடந்தது என்பது
கருத்து.                                                  40