வேள்விப் படலம் - 425
குசனுடைய மைந்தர் பெயரும் அவர்
ஆண்ட நகரங்களின் பெயரும்
8 வேள்விப் படலம்
425.
‘குசன். குசநாபன். கோது இல்
குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து
இசை கெழு வசு. என்று ஓதும்
இவர் பெயர்; இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி. நாபன்
குளிர் மகோதயம். ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம். மற்றை
வசு கிரிவிரசம். வாழ்ந்தார்.
கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு - புகழ் விளங்கும்; ஓதும்
- கூறும்; குளிர் - குளிர்ந்த; வசை இல் - குற்றமில்லாத. 4-1
