வெட்கப்படும் மேஜை
அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது
ஏன்?
அதற்கு டிராயர் இல்லை.
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.
ரீகனைத் தூங்குன்னு சொன்னால் தூங்கமாட்டார்.
ஏன்?
அவருக்குத் தமிழ் தெரியாது.
அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
அப்படியா
ஆமாம். அது பட்ட மரம்
