வீட்டுக் கணக்கு

bookmark

"இந்த ரோடு எங்கே போகிறது?" "எங்கும் போகவில்லை!" "நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது."

"டாக்டர் என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்." "இன்னும் சில நிமிஷத்துல வந்துவிடுகிறேன்" "அதுவரை நான் என்ன செய்வது?" "பென்சிலை உபயோகியுங்கள்."

"எதுக்குடா மளிகை கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?" "எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா."

"என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு..." அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!"

"கேரட்டைப் 'பச்சை'யா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுனு எல்லா கடையிலேயும் தேடினேன், கிடைக்கலே!" "அப்படியா?! ஆமாம், எல்லா கடையிலேயும் கேரட் 'சிவப்பா'தான் கிடைக்குது."