விஷ்ணு புராணம் அறிமுகம்
விஷ்ணு புராணம் அறிமுகம்விஷ்ணு புராணம், பதினெட்டு புராணங்களில் மிகவும் இன்றியமையாத முக்கியமான புராணம் என்று வைணவர்களால் கூறப்படுகின்றது. விஷ்ணு புராணம் என்பது ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கும் என்று கருதப்படுகின்றது. விஷ்ணு புராணத்தில் பலவிதமான குறிப்புகளை பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த புராணம் இறைவனின் திருவிளையாடல்களில் மட்டும் எடுத்து உரைக்காமல் அறிவியல் ரீதியாகவும், பல வினோதமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இப்புராணம் அமைந்துள்ளது.புராணம் என்பது இறைவனின் திருவிளையாடல்கள் மட்டும் எடுத்துரைக்காது அதை மீறிய அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் கதைகளின் வழியாக நம்முடைய முன்னோர்கள் நமக்கு எடுத்து சென்று இருக்கின்றார்கள் என்பதை நாம் இந்த புராணத்தை படிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.விஷ்ணு புராணத்தில் பரத கண்டத்தின் அதாவது இந்தியாவில் நாகரிகம் எவ்விதத்தில் இருந்தது என்றும், இந்தியாவில் பின்பற்றப்படுகின்ற பண்பாடுகள் யாவற்றிற்கும் கருவூலமாக இந்த புராணம் இருக்கின்றது என்று கூறுவதில் எந்தவித ஐயமும் இல்லை.பதினெட்டு புராணங்களில் விஷ்ணு புராணம் என்பது மூன்றாவது புராணமாக கூறப்படுகின்றது. இந்த புராணத்தில் மொத்தம் இருபத்தி மூன்றாயிரம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. இன்றைய நிலையில் கிடைக்கின்ற விஷ்ணு புராணம் அல்லது 6 ஆயிரம் பாடல்களை கொண்டதாகும்.விஷ்ணு புராணம் ஆறு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 128 அதிகாரங்கள் உள்ளன. விஷ்ணு புராணத்தில் நான்காம் அத்தியாயம் மட்டுமே உரைநடையில் எழுதப்பட்டு இருக்கின்றது. விஷ்ணு புராணம் என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய பழங்கால மன்னர்களின் வம்சாவளிகளின் வரலாற்று குறிப்புகளை குறிப்பிடும் பகுதியாகவும் உள்ளது. ஒவ்வொரு புராணமும் அறிவியலிலும், ஞானத்திலும் சிறந்த முனிவர்களாலும், ரிஷிகளாலும் அவர்களுடைய சீடர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் புராணமும் அதே வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அதாவது பராசர முனிவர் மூலமாக இந்த புராணம் நமக்கு கிடைத்திருக்கின்றது. இதில் கேள்வி கேட்கக்கூடிய நபராக இருப்பவர் அவருடைய சீடரான மைத்ரேய முனிவர் என்பவர் ஆவார்.இவர்களின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் பலவற்றின் மூலம் இந்த புராணம் பலவித நுண்ணிய உட்பொருள் நிறைந்த கருத்துக்களை சுமந்து இருக்கக்கூடிய பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இன்றளவும் நமக்காக காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்ற கருத்துக்களை உடையதாகும்.தங்கத்தை காட்டிலும் விலை உயர்ந்த வைரத்தை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பதுபோல, வைரத்திற்கு இணையாக இருக்கக்கூடிய கருத்துக்களையும் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.
