வரைக்காட்சிப் படலம் - 962
அனைவரும் மலைவளத்தில் ஈடுபட்டிருத்தல்
962.
இறக்கும் என்பதை எண்ணிலர். எண்ணுங்கால்.
பிறக்கும் என்பது ஒர் பீழையது ஆதலால்.
துறக்கம் எய்திய தூயவரே என.
மறக்ககிற்றிலர். அன்னதன் மாண்பு எலாம்.
(அங்கே தங்கிய ஆடவரும். மகளிரும்); இறக்கம் என்பதை -
(மலையை விட்டு) இறங்குவது என்பதை; எண்ணுங்கால் அது -
நினைத்தால் அச் செயல்; ஒர் பீழை பிறக்கும் - பெருந் துன்பத்தை
உண்டாக்கும்; என்பது ஆதலால் - என்ற காரணத்தால்; எண்ணிலர் -
(அதை மனத்தாலும்) நினையாதவரானார்கள் (அல்லாமலும் அவர்கள்);
துறக்கம் எய்திய - விண்ணுலக இன்பத்தை நுகர்கின்றன; தூயவர் என
- சான்றோர் போல; அன்னதன் மாண்பு எலாம் - அந்த மலையின்
வளங்களையெல்லாம்; மறக்க கிற்றிலர் - மறக்க முடியாதவர்
ஆனார்கள்.
துறக்கம் புக்க சான்றோர் அதன் சிறப்பை எண்ணுவதல்லாமல்
வேறு எதனையும் மனத்தாலும் கருதாதவாறு போல. அந்த மலையைச்
சேர்ந்த ஆடவரும் மகளிரும் அம் மலைவளத்தில்
ஈடுபட்டிருந்தார்களேயன்றி வேறு எதையும் நினைக்கவில்லை
என்பது. 35
