யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

bookmark

வாழ்க்கை வரலாறு

இவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடகர், பாடலாசிரியர், திரைப்பட நடிகர் மற்றும் ஒலிப்பதிவாளராகவும் உள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். இவர் 100 மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பிண்ணனி இசை அமைத்துள்ளார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும்.இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.

இவர் தனது இசை வாழ்க்கையை 1996 ஆம் ஆண்டில், 16 வயதில், தொடங்கினார். ஆரம்பப் போராட்டத்திற்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவானார்.

15 ஆண்டுகளில், யுவன் ஷங்கர் ராஜா 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தார். மேற்கத்திய இசைக் கூறுகளைப் தமிழிசையில் பயன்படுத்தியவர் இவர். மேலும் இவர் தமிழ் திரைப்பட மற்றும் இசைத் துறைக்கு ஹிப் ஹாப் முறையை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் ‘ரீமிக்ஸ் சகாப்தத்தை’ ஆரம்பித்து வைத்தவர்.

அவர் இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 2006 இல் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். ராம் திரைப்படத்திற்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருதிற்காக பரிந்துறைக்கப்பட்ட ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர்.