மோதிரம்

bookmark

1. "என்னது.... டாஸ்மாக் பார்ல பார்த்த பையன் நல்லவனா? அவனுக்கே நம்ம பொண்ணைக் கட்டி வைக்கணுமா?" 

"ஆமாம்டி. நான் கேட்காமயே அவனுடைய சைட்டிஷ்ல பாதியை எனக்குக் கொடுத்தான்!"

2. "தலைவரே... உங்களுக்கு கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவரை ஏன் துரத்திட்டீங்க?"

"டி.வி. பொட்டியைக் காட்டி "மானிட்டர்"னு சொல்றான். "மானிட்டர்னா சரக்குன்னு கூட தெரியாத ஒருத்தன் கிட்ட நான் கத்துக்கறதுக்கு என்னய்யா இருக்கு...?"

3. "ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"

"டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!"

4. "அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"

"மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!"

5. "சோப்பு மாத்திப் போட்டதுல பிரச்சினையாகிடுச்சுன்னு டாக்டர்கிட்ட சொன்னா, "நீ ஏன் மாத்திப் போட்டே..? சரியான ஆளா பார்த்து சோப்பு போட வேண்டியது தானே" ன்னு கேக்கறாரு!"