மேன்மையானது

மேன்மையானது

bookmark

ஒரு போதும் செய்யாதிருப்பினும் தாமதமாகச் செய்வது மேல்.

நாளை கிடைக்கும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்காய் மேல்.

கெட்டதை நினைப்பதைவிட ஏதும் நினையாமை மேல்.

வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்.

வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல்.

காதலிக்காமல் இருப்பதைவிட காதலித்து தோல்வியுறுவது மேல்.

பிற்பாடு கடுந்துயர் அடைவதைவிட தற்போது துயரமடைவது மேல்.

நடைமுறைப்படுத்தப்படாத சட்டம் இருப்பதைவிட சட்டமே இல்லாமல் இருப்பது மேல்.

குற்றம் புரியாத ஒருவன் துன்பப்படுவதைவிட குற்றம் புரிந்த பத்துபேர் தப்புவது மேல்,

கெட்ட நண்பர்களைவிட உதைபடுவதே மேல்,

நீண்ட நாள் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதே மேல்.

கொள்வதைவிடக் கொடுப்பது மேல்.