முகம்மது அலி ஜின்னா
முகம்மது அலி ஜின்னா ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.
ஜின்னா காந்தியுடன் பழகிய படி காந்தியை வெறுத்து வந்தார். இவர் மிகவும் ஒல்லியானவர். 6 அடி உயரம் கொண்டவர். 55 கிலோ எடையே இருந்தார். ஆயினும் எப்போதும் விலை உயர்ந்த சூட்டும், கோட்டும் அணிந்து கம்பீரமாகத் தோன்றுவார். 1947 தொடக்கத்தில் அவர் உடல் நிலையைக் குடும்ப டாக்டர் பரிசோதித்தார். ஜின்னாவுக்கு சயரோக நோய் வந்திருப்பதும், அவருடைய ஈரல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் எக்ஸ்ரே படத்திலிருந்து தெரிந்தது. இதை ஜின்னாவிடம் தெரிவித்த டாக்டர், "மதுப்பழக்கத்தையும், சிகரெட் பிடிப்பதையும் உடனே நிறுத்திவிடுங்கள். அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுங்கள். இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உங்கள் ஆயுள் முடிந்துவிடும்" என்று கூறினார். இதைக்கேட்டு, ஜின்னா கொஞ்சம்கூட கவலைப்பட வில்லை. "ஒரு சயரோக ஆஸ்பத்திரியில் நோயாளியாகக் கிடந்து சாவதைவிட, பாகிஸ்தான் கோரிக்கைக்காக போராடிச் சாவதேயை விரும்புகிறேன்" என்றார்.
