மிதிலைக் காட்சிப் படலம் - 711

bookmark

சந்திரன் மறைதல் (711-712)

திங்களின் மறைவு
 
711.

கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும். மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும். ஆழ்ந்தது - திங்களே.
 
கழிந்த - இறந்து போன; கங்குல் அரசன் - இரவாகிய  அரசனது;
கதிர்க்குடை   ஒளியுள்ள  வெண்கொற்றக்  குடையானது;  விழுந்தது
என்னவும் - (கீழே) விழுந்தது போலவும்; மேல்திசையாள்-  மேற்குத்
திசையான பெண்ணினுடைய; சுடர்க் கொழுந்து சேர் -  இளமையான
ஒளி    பொருந்திய; நுதல்  கோது  அறு  சுட்டி  -    நெற்றியில்
அணிந்துள்ள   குற்றமற்ற   சுட்டி  என்னும்  அணியானது;   போய்
அழிந்தது என்னவும் - கெட்டு  அழிந்தது  போலவும்;   திங்கள் -
சந்திரன்;  ஆழ்ந்தது  - (மேற்கடலில்) மூழ்கியது.   

வெண்     கொற்றக்குடை வீழ்தல்: அரசன் ஒழிந்த   நிலையையும்.
அவன்   தேவியின்   நெற்றிச்சுட்டி   அழிந்தமை   மேற்குத்   திசை
அரசியின் துக்கக் குறி    யையும்     உணர்த்தும்  என்பது   குறிப்பு. தற்குறிப்பேற்றவணி.  திலகம்   இடாமை.  நெற்றிச்சுட்டி   அணியாமை
முதலியன  கணவரை  இழந்த பெண்களுக்கு உரியன.           148