மிதிலைக் காட்சிப் படலம் - 681

bookmark

தேவர்கள் கோசிகனைச் சாந்தப்படுத்தல்

681.

‘நறைத் தரு உடைய கோனும்.
   நான்முகக் கடவுள்தானும்.
கறைத் தரு களனும். மற்றைக்
   கடவுளர் பிறரும். தொக்கு.
“பொறுத்தருள். முனிவ! நின்னைப்
   புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா
   கணத்தொடும் அமைக. அன்னான்.
 
நறைத்   தரு   உடைய-  மணமுள்ள கற்பகத்  தருவையுடைய;
கோனும்  -   இந்திரனும்;   நான்முகக்  கடவுள்தானும்  -  நான்
முகனான பிரமனும்; கறைத்  தருகளனும்  -  நஞ்சுக்  கண்டமுடைய
உருத்திர மூர்த்தியும்;   மற்றைக்    கடவுளர்  பிறரும்  -  மற்றத்
தேவர்களும். முனிவர்களும்;  தொக்கு  -  ஒருங்கு  கூடி; முனிவ -
(கௌசிகனை நோக்கி)   முனிவனே;   பொறுத்தருள் -   (தேவர்கள்
உன்னை இகழ்ந்ததை) பொறுத்தருள்க; நின்னைப் புகல் புகுந்தவனை
- உன்னைச் சரணம் அடைந்தவனை; போற்றும் - கைவிடாது காக்கும்;
அறத்திறன் -  தருமநெறி; நன்று - மிக நன்று; அன்னான் - அந்தத்
திரிசங்கு அரசன்; தாரா கணத்தொடும் - நட்சத்திரக் கூட்டத்தோடும்;
அமைக - பொருந்தி இருப்பானாக.                          118