மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவர் காலத்தில் போர்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை, எனினும் தமிழ் மொழி வளர முக்கியப் பங்களித்தவர். அரசர் குலத்தில் பிறந்த தமிழ் பற்றாளர் அல்லது புலவர் என நற்றிணை மூலம் இவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
