போர்க்களம்
1. "ரிலே ஓட்டப்பந்தய வீரரைக் காதலிச்சது தப்பாப் போச்சா.... ஏன்?"
"என்னோட பாதி தூரம் ஓடிவந்தவரு, அங்கேயிருந்து வேற ஒரு பொண்ணுகூட ஓடிப் போயிட்டாரு!"
2. "தலைவர் தினமும் கால் ரெண்டையும் கயிற்றால இறுக்கமா கட்டிட்டுத்தான் தூங்கறாராமே.. ஏன்?"
"கட்சி தாவற மாதிரி அவருக்கு அடிக்கடி கனவு வருதாம்..!"
3. "பத்தாம் நம்பர் பேஷன்ட் அபாய கட்டத்தைத் தாண்டிட்டார் டாக்டர்..."
"எப்படிச் சொல்றீங்க சிஸ்டர்?"
"ஆபரேஷன் வேண்டாம்னு சொல்லிட்டு, ஆஸ்பத்திரி கேட்டைத் தாண்டிட்டாரே...!"
4. "கபாலிக்கு இரக்க உணர்வு அதிகம்னு எப்படிச் சொல்றே..?"
"பத்து ஏழை கான்ஸ்டபிள்களை தத்தெடுத்து வளர்க்கறான் சார்..!"
5. "அமைச்சரே... எதிரி மன்னன் வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சியெல்லாம் எடுத்துக்கொண்ட பிறகுதான்
போர்களத்துக்கு வருவானாமே?"
"அதனால் என்ன மன்னா? தங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவன் ஓட்டப் பயிற்சி அல்லவா எடுத்துக்கொள்ள வேண்டும்!"
