போகிப் பண்டிகை
"எதுக்கு என்னைக் கையைத் தட்டிக் கூப்பிட்டு, என் பேர் என்னன்னு கேக்கறீங்க?"
"அடுத்த முறை கூப்பிடும்போது, பேரைச் சொல்லி கையைத் தட்டலாமேன்னுதான்!"
"தலைவரை ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போனது தப்பாப்போச்சா... ஏன்?"
"அங்க இருந்த நீச்சல் குளத்தைப் பார்த்ததும், 'அடப்பாவிங்களா... ஒரு ஏரியை என்னைக் கேட்காம வளைச்சுட்டீங்களே'ன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரு!"
"ஆனாலும்! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப மோசம்...."
"ஏன்?"
"போகிப் பண்டிகைக்கு பழைய பாய் கேட்கிறாங்க!"
"டாக்டர் இந்த மருந்து சைட் எஃபெக்ட் இருக்காதுன்னு சொன்னீங்க. ஆனா வயிறு வீங்கிப் போச்சே?"
"வயிறு நடுவுலதானே இருக்கு சைட்ல இல்லையே..."
"அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!"
"டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"
