பொய் ரோஸ்ட்

bookmark

1. "நமது அமைச்சர் சொந்தமாக எடுக்கும் படத்துக்கு என்ன பெயர்?" 

"ஏமாத்தி யோசி!"

லாவண்யா

2. "சாமியார் கதையை சினிமாவா எடுக்கிறீங்களே.... என்ன டைட்டில்?"

"பெண்ணைத் தாண்டி வருவாயா!"

லட்சுமி ஆயுடைநாயகம்

3. "உங்க மாமனார் கணக்கிலே ரொம்ப வீக்குன்னு எப்படிச் சொல்றே....?"

"அவரோட நாலாவது பெண்ணுக்கு "அஞ்சு"ன்னு பேர் வச்சிருக்காரே!"

என்.சங்கரதாஸ்

4. "விவசாயக் கல்லூரில விழாவுல பேசின தலைவரை பின்னி எடுத்துட்டாங்களாமே.... அப்படி என்ன பேசினாரு?

"உழுதவன் கணக்கு பார்த்தா, குவாட்டருக்குக்கூட மிஞ்சாதுன்னு பேசிட்டாரு!"

சோ.ராமு

5. "என்னய்யா நெய் ரோஸ்ட்ல நெய் வாசமே வரலை...?"

"அப்ப பொய் ரோஸ்ட்னு வச்சுக்கங்க சார்!"