பிற்காலச் சேரர்கள்
"சேரமான் பெருமாள்” என்பது பொதுவாகத் தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும். சேரமான் பெருமாள் என்ற ஒரு அரசர் பிற்காலச் சேரர்கள் வரலாற்றில் வாழ்ந்ததாகவும். இவரது காலத்தில் எண்ணற்ற சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் நுழைந்து பின்னர் மலையாள மொழி பிறந்ததாகவும் கருதப்படுகிறது. அத்துடன் இந்த சேரமான் பெருமாள் பற்றிக் கீழ்க்கண்ட தகவல்கள் மட்டும் கிடைத்து உள்ளன. அவை பின்வருமாறு:
1. க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இவர் இருந்து இருக்கிறார் , இப்பெண்கள் தான் கேரளத்தின் அரசர்களை பெற்றெடுத்தனர்.
2. எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர் இவர்.
3. கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர் மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.
4. இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், நிலவு பிரியும் நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்ப்பார்வையில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர்.
5. கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.
6. கிறிஸ்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர். அத்துடன் கிறிஸ்துவ மதத்தையும் கேரளத்தில் ஆதரித்தவர்.
7. அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர். .
8. அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் மீண்டும் இந்து மதத்தை தழுவி சிவ பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.
மேற்கொண்டு இவரை பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. மேற்கண்ட தகவல்கள் கூட அனுமானத்தின் அடிப்படையில் தான் யூகிக்கப்பட்டு உள்ளது. இவர் எப்படி இறந்தார் என்று கூட யாருக்கும் தெரியாது. இவருக்குப் பின் வந்தவர்கள் கூட யார் என்பது புரியாத வரலாற்றுப் புதிராக உள்ளது. எனினும், இவர் காலத்துக்கு பிறகு சேரப் பேரரசு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கி விட்டதாகத் தெரிகிறது.
