பிரிட்டிஷ் அரசால் புரட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள்

bookmark


துரோகிகள் சிலரின் உதவியோடு 1801 ஆம் ஆண்டு இறுதிக்குள் காடுகளில் ஒளிந்திருந்த மற்ற புரட்சியணித் தலைவர்களையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து சிறையில் வைத்தனர். உடனடியாக விசாரனை மேற்கொள்ளப் பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

1801, அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, அவர்களுடைய மகன்கள் கருத்த தம்பி, முள்ளிக்குட்டித் தம்பி ஆகியோரும், மருது பாண்டியன் அவருடைய மகன் செவத்த தம்பி, சிறுவயதேயான பேரன் முத்துசாமி, இராமநாதபுரம் ராஜா என்றழைக்கப்பட்ட முத்து கருப்பத்தேவர், காடல் குடிப்பாளையக்காரர் ஆகியோர் உட்பட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் சிவகங்கைச் சீமையிலுள்ள திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

செவத்தையாவும் ஊமைத்துரையும் அவர்களுடைய நெருங்கிய சகாக்களும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரே மரத்தில் அனைவரும் ஒன்றாகத் தூக்கிலிடப்பட்டனர்.

நாடு கடத்துதல் :-

புரட்சியணித்தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை (தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டனர். இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டிருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இக்கடற் பயணத்தின் போது அடைந்த துயர் அவலமானது. இவர்களுல் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்றடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கல் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.

வேலூர் சிப்பாய் எழுச்சி :-

புரட்சியணியில் எஞ்சியிருந்த வீரர்களை, அவர்களது பின்னனியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலேயே ஆங்கிலேயர்கள் வேலூர்க் கோட்டையில் பணியமர்த்தினர். ஐரோப்பியத் துருப்புகள் தவிர, 23-ஆம் படைவகுப்பின் இரண்டாவது பட்டாளப் பிரிவும் வேலூர் கோட்டையில் இருந்தது. இந்த இரண்டாவது பட்டாள ப்பிரிவு முழுவதும், புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர், திருநெல்வேலியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்ட வீரர்களைக் கொண்டதாகும். மேலும் வேலுர்க் கோட்டையில் திப்பு சுல்தான்களின் மகன்கள் குறிப்பாக மூத்த மகன் பத்தே ஹைதர் இருப்பதை அவர்கள் கண்டனர். பத்தே ஹைதர் சிறையிருந்த போதும் பல்வேறு குறுநிலத் தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொன்டு புரட்சியை மீண்டும் வடிவமைக்கும் துடிப்புடன் செயல்பட்டார். மேலும் புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை விதித்து அதனைத் தாமே தலை தாங்கி நடத்திய அக்னியூ என்ற ஆங்கிலேயர் வேலூர்க் கோட்டைத் தலைமை அதிகாரியாக இருந்தார். எனவே புரட்சியாளர்கள் அவரையும் பழி வாங்க வேலூரை தமது நடவடிக்கைக்கான ஒரு மையமாக மாற்றினர்.

இதே சமயத்தில் இராணுவ வீரர்கள், நெற்றியில் சமய வழிபாட்டுச் சின்னங்கள் எவையும் அணியக் கூடாதென்றும், காதணி போன்ற அணிகலன்கள் அணியக் கூடாதென்றும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய வடிவிலமைந்த தலைப்பாகையினை அணிய வேண்டுமென அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட்னர். இது வீரர்களிடையே கொதிப்பினை ஏற்படுத்தின. எனவே பிரித்தானியரின் அதிகாரத்தை வீழ்த்த வேண்டுமென புரட்சியாளர்கள் தீர்மானித்தனர். பள்ளிகொண்டா, வாலாஜாபாத், சித்தூர், ஆற்காடு, ஸ்ரீகாகுளம், ஐதராபாத் ஆகிய இடங்களில் தமக்கு ஆதரவு தேடினர். எனினும் மற்ற பகுதிகளின் புரட்சியணியினர் வேலூரில் நடக்கப் போகும் புரட்சியின் சாதக பாதகங்களை அறியக் காத்திருந்தனர்.

1806-ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள் பொது எழுச்சியொன்றை நிகழ்த்தத் தீர்மானிக்கப்பட்டது, ஐதரபாத்திலும் வேலூரிலும் இருந்த இராணுவ முகாம்களில் இத் தேதி குறித்த செய்தி மறைமுகமாகப் பேசிக்கொள்ளப்பட்டது. ஆயினும் வேலூரில் ஜூலை, 10-ஆம் நாள் அதிகாலையிலேயே கலகம் வெடித்தது. புரட்சியாளர்கள், ஐரோப்பியப் படை வீரர் குழுவொன்றினைக் கொன்றொழித்து விட்டுக் கோட்டையைத் தங்கள் ஆதிக்கத்தில் கொணர்ந்தனர். திப்புவின் கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து வாலாஜாபாத்திலும், ஐதராபாத்திலும் 13 ஆம் தேதியன்று சிறு கலகம் ஏற்பட்டது. கர்னல் கில்லிஸ்பி வேலூர்க் கோட்டையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான் 113 ஐரோப்பிய இராணுவ வீரர்களை இழந்த பிரித்தானியப் படை புரட்சியாளர்கள் 350 பேரை கொன்று 500 பேரைச் சிறை செய்து, கோட்டையைத் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தது.

தமிழகத்தில் பிரிட்டனுக்கு எதிரான புரட்சி கால வரிசை முறை : -

அழகு முத்துக்கோன், பூலித்தேவனும் அவரின் நண்பர்கள் மற்றும் தளபதிகளும் – 1750ல் இருந்து 1770 வரை புரட்சியில் ஈடுபட்டனர்

வேலுநாச்சியார், மருதுபான்டியர் - 1770 முதல் 1790 வரை புரட்சியில் ஈடுபட்டனர்

வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை – 1790 களுக்குப் பிறகு புரட்சியில் ஈடுபட்டனர்

வேலூர்ப்புரட்சி 1806 புரட்சியில் ஈடுபட்டனர்

வேலூர் கலகத்துக்குப் பின் :-

இதன் பின்னர் 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகம் வட இந்தியாவில் வெகுவாகப் பரவினாலும், தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை

அறவழிப் போராட்டத்தில் :-

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய இந்திய தேசிய காங்கிரசு இந்திய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை ஏற்று வன்முறை தவிர்த்த முறைகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கைகளில் தமிழக செயற்பாட்டாளர்கள் குறிபிடத்தக்க பங்கு வகித்தனர்.

மதேவன் மகன் வைத்தியலிங்கம் - வடசேரி. நாகர்கோவில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர். இந்திய சுகந்திரத்திர்க்குப் பிறகு தாமரைப் பட்டயம் பெற்றவர். மண்டைக்காடு கலவரத்தின் போது, அமைதி ஏற்பட தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் பெரு முயற்சி எடுத்துக் கொண்டவர்.