பித்துக்குளி முருகதாஸ்
வாழ்க்கை வரலாறு
பித்துக்குளி முருகதாஸ் பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர். இவர் பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். 2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
