பி.டி. உஷா
வாழ்க்கை வரலாறு
பரவலாக பி. டி. உஷா என அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் ‘இந்தியத் தடகளங்களின் அரசி’ எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985-லும், 1986-லும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.