பாரடைப்பு!
1. "என் மனைவி என்னை சத்தம் வராம அடிப்பா..."
"பரவாயில்லையே... என் மனைவி என்னை ரத்தம் வராம அடிப்பா..!"
ப.உமாமகேஸ்வரி
2. "பொண்ணுக்கு பாடத் தெரியும்னு தரகர்கிட்ட சொல்லிட்டு, இப்பப் பாடச் சொன்னா... சித்ரா பாடின சி.டியைப் போடறீங்களே?"
"ஹி..... ஹி.... சித்ராவும் ஒரு பொண்ணுதானே...!"
எஸ்.எஸ்.பூங்கதிர்
3. "தலைவர் டாஸ்மாக் போறப்ப கடையைப் பூட்டிட்டாங்கன்னதும் உடனே நெஞ்சு வலி வந்துடுச்சாம்..!"
"அதுக்கு "மாரடைப்பு"தான் காரணமா..?"
"ம்ஹும்... "பாரடைப்பு" தான் காரணமாம்..!"
எஸ்.சக்தி
4. "ஏற்கெனவே இருந்த ஜெயில்ல தலைவரை திரும்பவும் போட்டுட்டாங்களா?"
"ஆமா.... தலைவரோட சொல் மாறினாலும் மாறும்.... "செல்" மாறாதுன்னு நான்தான் அப்பயே சொன்னேன்ல!"
ராம்.ஆதிநாராயணன்
5. "தேவைப்பட்டா நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லணும்..."
"தேவைப்படலைன்னா?"
"ஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்!"
